செல்போன் மூலம் ஆபாச பேச்சு... போலீசார் அதிரடி நடவடிக்கை.!Rang call distrubance preson arrested in Chennai

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவர் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வேன் மோதி காயமடைந்தார். இதில் வேன் ஓட்டுநர் செந்தில்குமார், சத்யாவின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக கூறி அவரது செல்போன் எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார்.

chennai

அதன்படி சத்தியா தொடர்பு கொண்ட போது செந்தில் குமார் ஆபாச வார்த்தைகளால் பேசியதுடன், வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். மேலும் பல்வேறு நபர்கள், சத்யா மற்றும் அவரது சகோதரிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து ஆபாசமாக பேசியுள்ளார்.

chennai

மேலும் சத்யாவின் எண்ணை ஆபாச பட குழுவில் இணைத்துள்ளார். இதனையடுத்து சத்யா உடனடியாக தாம்பரம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.