தமிழகம்

காதலித்து திருமணம் செய்தவர்களை பார்த்திருப்போம்! இது என்னடா புது வித கல்யாணம்! குழப்பத்தில் போலீஸ் அதிகாரிகள்.

Summary:

Ramesh preethi

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ப்ரீத்தி என்ற பெண்ணை 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இதனை அடுத்து ரமேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அப்போது தன் மனைவிக்கும் அகிலன் என்பவருடன் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. அதனால் தன்னையும் தன் இரண்டு குழந்தைகளையும் வேண்டாம் என ஒதுக்கிவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் தற்போது ப்ரீத்தியின் கணவர் அவர் மீது வித்தியாசமான புகார் ஒன்றை போலீசில் கொடுத்துள்ளார். அதாவது ப்ரீத்தி என்பது தனது மனைவியின் உண்மையான பெயர். ஆனால் ரமேஷ் திருமணம் செய்த போது அவர் பெயர் சிந்து என கூறி திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். 

இதில் என்ன இருக்கிறது என்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ப்ரீத்தியை திருமணம் செய்யும் போது அவருக்கு வயது 17 என்பதால் தனது மாமியாரும் அவரும் பார்ப்பதற்கு அக்காள் மாறி தோற்றம் அளிப்பதால் அவரது பெயரான சிந்து என்பதை தனது மனைவிக்கு வைத்து வயது 22 என கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர். 

இதனை அடுத்து ரமேஷின் மனைவி சிந்து அதாவது மாமியார் தான் மனைவி என ப்ரீத்தி கூறி சென்று விட்டதாக கூறியுள்ளார் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். 

 


Advertisement