4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.. சாகும்வரை ஆயுள் தண்டனை - இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம்.!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.. சாகும்வரை ஆயுள் தண்டனை - இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம்.!


Ramanathapuram Keelakarai 4 Aged Child Sexual harassment Case Court Sent Lifetime Prison on Accuse

பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையில், இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில், காஜா முகமது என்ற இளைஞர் கீழக்கரை காவல் துறையினரால் 16.06.2011 இல் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

ramanathapuram

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுபத்ரா, 4 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காஜா முகம்மதுக்கு ரூ.1 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம் மற்றும் சாகும் வரை மரண தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார். மேலும், அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.