எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் வந்தால் மோதல் வரும் - சட்டக்கல்லூரி மாணவர்கள் போர்க்கொடி.. காரணம் இதுதான்.!

எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் வந்தால் மோதல் வரும் - சட்டக்கல்லூரி மாணவர்கள் போர்க்கொடி.. காரணம் இதுதான்.!



Ramanathapuram Govt Law College Students Against EPS Visit on Pasumpon 30 Oct 2023 

 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் இறுதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், ஒரு சமூகத்தினருக்கு 10.5% உள் ஓதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் பிற சமுதாயங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் உள் ஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டது. 

அன்றைய சமயத்தில் இருதரப்பு சமூக பிரச்சனையாக இருந்து வந்த பிரச்சனை, அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர் செல்வம் பிரிவை தொடர்ந்து, அவை தொடர்ந்து இருதரப்பு பிரச்சனையாக உருவானது. எம்.பி.சி பிரிவில் 10.5% க்கு எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினர், எடப்பாடி பழனிச்சாமியின் மீதும் அதிருப்தி கொண்டனர்.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், அம்மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில், "நாங்கள்‌ இராமநாதபுரம்‌ அரசு சட்டக்கல்லூரியில்‌ சட்டப்படிப்பு படித்து வருகிறோம்‌. கடந்த 2021-ம்‌ ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள்‌, தமிழ்நாடு கல்வி வேலை வாய்ப்பில்‌ மிகவும்‌ பிற்படுத்தபட்ட மற்றும்‌ சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில்‌ 20% சதவீதத்தில்‌ ஒரு குறிபிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும்‌ 10.5% சதவீதம்‌ இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டார்‌. 

ramanathapuram

மேற்கண்ட அரசாணையால்‌ மிகவும்‌ பிற்படுத்தபட்ட 118 சாதிகளும்‌ 68 எசீ்மரபினர்‌ சாதிகளும்‌ பெரிதும்‌ பாதிப்படைந்தனர்‌. மேற்படி அரசாணையினால்‌ முக்குலத்தோரில்‌ கள்ளர்‌ மற்றும்‌ மறவர்‌ சமுதாயத்தினர்கள்‌ பெரிதும்‌ பாதிப்படைந்துள்ளனர்‌. மேற்கண்ட அரசாணையினை உயர்நீதிமன்றம்‌ மற்றும்‌ உச்சநீதிமன்றம்‌ இரத்து செய்தது. இந்நிலையில்‌ வருகின்ற 30.10.2023-ம்‌ தேதியன்று இராமநாதபுரம்‌ மாவட்டம்‌, பசும்பொன்னில்‌ தேசிய தலைவர்‌ அய்யா பசும்பொன்‌ உ.முத்துராமலிங்கத்தேவர்‌ அவர்களின்‌ குருபூஜை நடைபெறவுள்ளது.

அந்நிகழ்ச்சியில்‌ முக்குலத்தோர சமுதாய மக்கள்‌ அதிகளவில்‌ கலந்து கொள்வார்கள்‌. மேற்படி நிகழ்ச்சியில்‌ முன்னாள்‌ முதல்வர்‌ எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களும்‌ கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள்‌ வருகிறது. மேற்கண்ட அரசாணையினால்‌ பாதிப்படைந்த முக்குலத்தோர்‌ சமுதாய மக்களுக்கும்‌ அவ்வரசாணையினை வெளியிட்ட எடப்பாடி திரு.பழனிச்சாமி தரப்பினருக்கும்‌ இடையே மோதல்கள்‌ வர வாய்ப்புள்ளது, 

ஆகவே அமைதியான முறையில்‌ தேசிய தலைவர்‌ அய்யா பசும்பொன்‌ உ.முத்துராமலிங்கத்தேவர்‌ அவர்களின்‌ குருபூஜை நடைபெற மேற்படி எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள்‌ 30.10.2023-ம்‌ தேதியன்று அய்யா பசும்பொன்‌ உ.முத்துராமலிங்கத்தேவர்‌ அவர்களின்‌ குருபூஜையில்‌ கலந்து கொள்ள அனுமதி அளிக்காமல்‌ சட்டம்‌-ஒழுங்கினை பாதுகாத்து அமைதியான முறையில்‌ குருபூஜை நடத்தி தருமாறு தங்களை அன்புடன்‌ கேட்டுகொள்கிறோம்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.