தமிழகம் சினிமா

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரம்! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்!

Summary:

rajini e pass issue

கடந்த ஜூன் 26 ஆம் தேதி செங்கல்பட்டு எல்லைக்கு உட்பட்ட கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ரஜினி சென்றுள்ளார். அப்போது அவர் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் செலுத்தினார் என தகவல் வெளியானது. ஆனாலும் முழு ஊரடங்கின் போது ரஜினி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

முழு ஊரடங்கு சமயத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், ரஜினிக்கு அபராதம் மட்டும் விதித்திருப்பது ஏன் எனவும் பலதரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தது.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று தான் பயணம் மேற்கொண்டுள்ளார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆய்வு மேற்கொண்டதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-பாஸ் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Advertisement