#RainAlert: தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

#RainAlert: தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



rain warning for 8 districts

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தித்தொகுப்பில், தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 

tamilnadu

மேலும் அதிகபட்ச வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் தேனியில் தலா 9 சென்டிமீட்டரும், திண்டுக்கல்லில் தலா 6 சென்டிமீட்டரும்,  நீலகிரியில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.