தமிழகம்

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை! வானிலை மையம் அறிவிப்பு!

Summary:

Rain update next two days rain in tamilnadu

சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம், மிக மோசமாக தாக்கிய வராதா புயல், டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயல், இன்னும் இதுபோன்ற ஏகப்பட்ட இயற்கை சீற்றங்களால் மழை வர போகிறது என்றாலே நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு பயம் வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்குக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும், அடுத்த இரண்டு நாட்களும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மிதமான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 


Advertisement