
Rain update for tamilnadu districts
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்துவருகிறது. இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையின்படி அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை (19-ம் தேதி) சேலம், தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள்(நவம்பர் 20-ம் தேதி) விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement