தமிழகம் இந்தியா

அடுத்த 24 மணி நேரத்தில் மழை! அறிவிப்பை வெளியிட்டது வானிலை ஆய்வு மையம்!

Summary:

Rain in next 24 hours in tamilnadu and pondichery

தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து வெயில் தலைகாட்ட தொடங்கிவிட்டது. பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் சற்று உயர்வாகவே தெரிகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்று வலுப்பெறுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அடுத்து வரும் ஓரிரு நாட்களில் வெப்பம் அதிகரிப்பால், இடி அல்லது மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement