Rain Alert: அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வட தமிழக மாவட்டங்களான தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் கூடும் எனவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.