தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



rain alert for tamilnadu and puduchery

காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 15-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Rain alert

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 36 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 27 டிகிரி செல்ஸியஸ் அளவில் இருக்கக்கூடும்.