தமிழகம்

சார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார்.! எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.!

Summary:

சார் இப்படியெல்லாம் பேசாதீங்க சார்.! எல்லாரும் ஸ்டுடண்ட்ஸ் ஆனால் நீமட்டும்... தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்.!

புதுக்கோட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில், மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 11 ஆம் மாணவிக்கு அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு அந்த வகுப்பின் கணிதம் மற்றும் வணிகவியல் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. 

அந்த ஆசிரியர் தொலைபேசியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பேசிய ஆடியோவில், நம்முடைய வகுப்பில் உள்ள மத்த மாணவிகள் எல்லாம் என்னோட மாணவிகள் மட்டும்தான். ஆனால், நீ என்னுடைய உயிர். உன்னோட வாய்ஸ் கேட்டாலே எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். எனக்கு உன்ன பக்கத்தில் அமர்ந்து உனது கன்னத்தை கில்லனும்.. மற்றும் பல ஆபாச வார்த்தைகளுடன் அந்த மாணவியிடம் தொலைபேசியில் சில்மிஷம் செய்துள்ளார்.

சார்.. இப்படியெல்லாம் பேசாதீங்க சார். எனக்கு பிடிக்கல என அந்த மாணவி கூறியும். இதெல்லாம் யார் பண்ணாம இருக்கா.. என கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பேசியுள்ளார் காம கொடூர ஆசிரியர். இதற்கிடையில் ஆசிரியர் சண்முகநாதன் மாணவியிடம் ஆபாசமாகவும், பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசிய ஆடியோ சமூக வளைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து ஆசிரியர் சண்முகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 


Advertisement