பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திவாகர் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி...
நிவர் புயல் பயம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயி செய்த காரியம்...! இதுவும் நல்ல ஐடியாதான்..
நிவர் புயல் அச்சம் காரணமாக புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வீட்டின் மேலிருந்த ஓடுகளை பிரித்து தரையில் அடுக்கி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து புயல் கரையை கடக்கும்போது புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், அதிவேகத்தில் புயல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் காற்றில் இருந்து தப்பிக்கவும், மக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொதுமக்களும் தங்கள் உடமைகளை காப்பாற்றிக்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி தனது வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை கழட்டி கீழே அடுக்கி வைத்துள்ளார். ஏற்கனவே கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டநிலையியல், நிவர் புயலால் அதுபோன்ற சேதம் ஏற்பட்டுவிட கூடாது என அவர் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
மேலும், புதுகோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான, குறிப்பாக கடற்கரை ஓரம் அமைத்துள்ள இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளை பாதுக்காக்க வீட்டின் மேல் வலை போன்றவரை விரித்தும், வீட்டுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.