தமிழகம்

புதுக்கோட்டை 7 வயது சிறுமி கொடூர கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்..! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Pudukkottai 7 years old girl murder accused escaped

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி தப்பித்து ஓடிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல்போன நிலையில் சிறுமையை பலஇடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் சிறுமி அவரது வீட்டில் இருந்து பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத குளத்தில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து சிறுமியின் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த ராஜா(26) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் ராஜா சிறுமையை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் கைதி ராஜாவை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது கைவிலங்கை உருவிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளான். தப்பி ஓடிய கைதி ராஜாவை பிடிக்க போலீசார் 6 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Advertisement