திடீரென மெரினாவில் போராட்டம் நடத்த முயன்ற இளைஞர்கள்!

திடீரென மெரினாவில் போராட்டம் நடத்த முயன்ற இளைஞர்கள்!



protest-in-merina

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மும்பை, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

protest

சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த வெளிமாநில இளைஞர்கள் மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல்குளம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கு வந்த போலீசார் இளைஞர்களின் போராட்டத்தைத் தடுத்து, உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முடியாது. எனவே போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களை போலீசார் எச்சரித்தனர். 

இதனையடுத்து மெரினாவில் கூடியிருந்த 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.