அம்பத்தூரில் வாட்ஸ்‌ ஆப் மற்றும் டெலிகிராம் குரூப் மூலம் விபச்சாரம்.... 8 பேர் கைது.!prostitution-through-whatsapp-and-telegram-groups-in-ch

சென்னை அம்பத்தூரில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பலை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறது காவல்துறை. இச்சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே இளம் பெண்களையும் சிறுமிகளையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் அந்த குடியிருப்பு பகுதியை தீவிர கண்காணிப்பில் வைத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். அங்கே விபச்சாரம் நடப்பது உறுதியானதை தொடர்ந்து அதிரடியாக சோதனை நடத்திய காவல்துறையினர் திருநெல்வேலியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த லிங்கம் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 25 வயது இளம்பெண்கள் இரண்டு பேரையும் 17 வயது சிறுமியையும் மீட்டுள்ளனர்.

tamilnadu

கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன. இவர்கள் வாட்ஸப் மற்றும் டெலிகிராமில் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவர் தவிர வாட்ஸ்அப் மற்றும்  டெலிகிராம் குழுக்களில் பல  புரோக்கர்களை நியமித்து செயல்பட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இவர்களது செல்போன்கள் மற்றும் வாட்ஸப் குழுக்களின் மூலம் தொடர்பில் இருந்த புரோக்கர்களான ஐயா குட்டி வீர மனோகர்,மீரான், ராஜா, நாகேந்திரன்,முத்துநாதன் ஆகியோரையும் காவல்துறை கைது செய்து இருக்கிறது. இவர்கள் அனைவரின் மீதும் விபச்சார வழக்கு மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.