தமிழகம்

மாணவியுடன் ஓடிப்போன கல்லூரி பேராசிரியர்!. கண்ணீருடன் கதறும் பேராசிரியரின் மனைவி!.

Summary:

மாணவியுடன் ஓடிப்போன கல்லூரி பேராசிரியர்!. கண்ணீருடன் கதறும் பேராசிரியரின் மனைவி!.


கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் சிலம்பரசன் என்பவர் கல்லூரி மாணவியுடன் ஓடியுள்ளார்.

அரசு கலைக்கல்லூரியில் வசந்தி என்ற மாணவி எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன்.

இவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில் கல்லூரியில் வசந்தி என்ற மாணவியொடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. 

இதனையடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்துவாழ ஆசைப்பட்டு, கல்லூரியில் இருந்து இவர்கள் இருவரும் ஓடிப்போயுள்ளனர். இதனையடுத்து மாணவி வீடு திரும்பாததை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து வசந்தியை தேட ஆரம்பித்தனர்.

இதனையடுத்து, ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு சென்ற வசந்தியின் பெற்றோர்கள், தன மகளை வீட்டிற்கு வரும்படி கெஞ்சியுள்ளனர். 

அந்த கல்நெஞ்சம் கொண்ட மாணவி, நான் வரமுடியாது, எனக்கு சிலம்பரசன் தான் முக்கியம், வாழ்ந்தாலும் செத்தாலும்  அவர்கூடத்தான் என கூறியுள்ளார்.

இதேபோல் சிலம்பரசனின் மனைவியும், கணவரை தன்னுடன் வரும்படி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். சிலம்பரசனும், நான் அவளுடன் தான் சேர்ந்து வாழப்போகிறேன் என உறுதியாக கூறியுள்ளார்.


Advertisement