வெங்காயம் விலை 150 ரூபாய் என கதறும் பொதுமக்களே! இந்த விவசாயிகளுக்கு ஏற்படும் கொடுமையை பாருங்கள்!

வெங்காயம் விலை 150 ரூபாய் என கதறும் பொதுமக்களே! இந்த விவசாயிகளுக்கு ஏற்படும் கொடுமையை பாருங்கள்!


problems-for-farmers

வெங்காயம் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது என்று  தினம் தினம் வேதனைப்படுபவர்களுக்கு விவசாயிகள் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலானோருக்கு தனது வயிறு நிறைந்தால் போதும். ஆனால் தனக்கு சோறு போடுவதற்காக பல தியாகங்களை செய்த விவசாயிகளை யாரும் கண்டுகொள்வதில்லை.

சமீபத்தில் ஒரு விவசாயி கஷ்டப்பட்டு வாழை பயிரிட்டு, அந்த வாழைத்தார்களை விற்பனை செய்துள்ளார். அதனுடைய ரசீதை பார்க்கும்போது. மனம் கடும் வேதனை அடைகிறது. அதாவது அந்த விவசாயி 60 வாழைத் தார்களை விற்பனை செய்து வெறும் 717 ருபாய் பெற்றுள்ளார்.

farmers

 
அதாவது 60 தார், ஒரு தாருக்கு சராசரியாக 50 பழம் என்று வைத்துக்கொண்டால் 3000 பழங்கள். ஒரு பழம் வெறும் 23 பைசா இருந்தால் மட்டுமே 700 ரூபாய் வரை வரும்
ஆனால் இதை எந்த கடையிலையாவது 50 பைசாவிற்கு ஒரு பழம் கிடைக்குமா. பிறகு வேறங்கு செல்கிறது அந்த பணம். வண்டி வாடகை மற்றும் மண்டி கூலி மட்டுமே 1047 ரு இதில் கமிஷன் 177 ரு. ஒரு வருடம் கடின உழைப்பை கொடுத்து விளைவித்தவனுக்கு வெறும் 717 ரூபாய் மட்டும்.

உணவு விற்பனைக்கு வந்தது, தண்ணீர் விற்பனைக்கு வந்தது இன்று சுவாசிக்கும் காற்றும் கேன்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. இப்படியே போனால் விவசாயி தனக்கான உணவை மட்டும் உற்பத்தி செய்ய நேரிடும். எனவே விவசாயிகள் பயனடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

             farmers