கவர்னர் தமிழக அரசு தயாரித்து கொடுத்த; சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது குறித்து... கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்...!

கவர்னர் தமிழக அரசு தயாரித்து கொடுத்த; சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது குறித்து... கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்...!



Prepared by the Governor Tamil Nadu Government; Regarding the omission of some parts in the assembly speech... Governor's House area information...!

கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை தவிர்த்தது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

ஜனவரி 6-ஆம் தேதி கவர்னர் உரையை அரசு அனுப்பி வைத்தது. அதில் இருந்த ஆட்சேபகரமான விஷயங்களை கவர்னர் குறிப்பிட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது. பேசும்போது நீங்கள் தவிர்த்து பேசுங்கள் என சொல்லியுள்ளனர். அது ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது. 

கவர்னர், அதை நீக்கி சபையில் வாசித்தபோது உடனடியாக சேனல்களுக்கு அதை அனுப்பி வைத்துள்ளனர். கவர்னர் இருக்கும்போதே, கவர்னர் உரைக்குப்பின் சபை முடித்து வைக்கப்பட வேண்டும் என்ற சபை மரபை மீறி, தீர்மானம் கொண்டு வரப்பட்டு கவர்னர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

கவர்னர் உரையை நீக்குகிறேன் எனக்கூறி, கவர்னர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய அவ்வையாரின் "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்" என்கிற வரிகளையும், பாரதியாரின் வாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும், நாட்டுமக்களுக்கு கவர்னர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர். 

ஜனவரி 12-ஆம் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவுக்கூரும் இளைஞர் தினம். அந்த தினத்தை குறிப்பிட்டு சேர்த்து பேசி உள்ளார். இது அவை மரபை மீறிய செயல் அல்ல.

அரசாங்கத்தைப் கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகளை, நடைமுறை வேறாக இருந்ததால் தவிர்த்துள்ளார். பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவிர்த்தார். 

இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும்" இதை கவர்னர் சொல்ல முடியாது. முதலமைச்சர் அவர் உரையில் பேச வேண்டியது. கொள்கை, செய்யவேண்டியதை மட்டும் கவர்னர் உரையில் வைப்பார்கள். மேலும் இதுபோன்ற அதிகப்படியான புகழ்ச்சிகளை தவிர்ப்பேன் என்று கவர்னர் கூறிவிட்டார்.

இந்த மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாக தொடர்கிறது, வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது என்று இல்லாத ஒன்றை கூற கவர்னர் மறுத்துவிட்டார்.

தினசரி செய்தி சேனல்கள், நாளிதழ்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை அடுக்காக புகாராக சொல்லும்போது இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்பது யதார்த்தம் அல்ல. உண்மை இல்லாத ஒன்றை கவர்னர் தவிர்த்துள்ளார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக இருக்கும் வரிகளை எப்படி ஏற்க முடியும். அது சர்வதேச பிரச்சினை மத்திய அரசின் தலையீடு இல்லாமல் இது எப்படி நடக்க முடியும் என்பதால் மத்திய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை சேர்த்து படித்ததுள்ளார்.

பல இடங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியின் சொர்க்கமாக மாநிலம் திகழ்கிறது, என்கிற புகழ்ச்சியான வார்த்தைகள் முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி.யை போற்றும் வகையில் இருந்தது. இந்த வார்த்தைகள் கவர்னரால் தவிர்க்கப்பட்டது. 

கடந்த 1½ வருடங்களில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பது ஜனவரி 7-ஆம் தேதி கவர்னர் உரையில் இருந்தது. இதை கவர்னர் சுட்டிக்காட்டி மாற்றச் சொன்னார். அது அப்படியே இருந்ததால் அதை தவிர்த்தார். 

உண்மையில், கடந்த ஒன்றரை வருடங்களில் தமிழக அரசு ஈர்த்த அந்நிய முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள் என பெருமையாக பதிவிடப்பட்டுள்ளது. 

ஆனால் இதே காலக்கட்டத்தில் மற்ற மாநிலங்களில், மராட்டியம் - 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா 25 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இதில் பத்தில் ஒருபங்கை ஈர்த்துவிட்டு பெருமையடைவது பிழையான செயல் என்பதால் தவிர்த்தார்

கவர்னரை சுற்றி நின்று சட்டசபை உறுப்பினர்கள், உரையை வாசிக்க விடாமல் கோஷமிட்டு கெரோ செய்தனர். இது . கவர்னர் பேச்சுக்கு எதிராக கெரோ செய்து கோஷம் எழுப்பும் போது சபாநாயகர் தடுக்காமல் அவர்களை வேடிக்கை பார்த்தார். இதற்கு முன் நடக்காத விஷயம்.

கவர்னர் இருக்கையில் இருக்கும்போது, கவர்னர் உரையின் தமிழாக்கம், மற்றும் சபாநாயகர் உரைக்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால் சபை மரபை மீறி முதலமைச்சர் கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது, சபை விதிகளின்படி, மரபை மீறிய செயல். 

சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக இருக்கும் கவர்னரின் பேச்சை சபைக் குறிப்பிலிருந்து நீக்குவது என்பது சட்ட வல்லுனர்கள் முன் தீவிர விவாதப் பொருளாகும். இவ்வாறு கவர்னர் மாளிகை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.