தமிழகம் லைப் ஸ்டைல்

நிறைமாத கர்ப்பிணி பெண் தனது வளைகாப்பின்போது செய்த காரியத்தை பாருங்க!! வைரல் வீடியோ..!

Summary:

நிறைமாத கர்ப்பிணி பெண் தனது வளைகாப்பின்போது செய்த காரியத்தை பாருங்க!! வைரல் வீடியோ..!

மணிகே மாகே ஹிதே பாடலுக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் மிகவும் அழகாக நடனமாடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சமூக வலைத்தளங்களின் மிக பெரிய வளர்ச்சியை அடுத்து இன்று இணையத்தில் எப்போது எந்த விசயம் வைரலாகும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில், நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் மணிகே மாகே ஹிதே பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இலங்கையைச் சேர்ந்த யோஹானி திலோகா என்னும் 28 வயதுப் பெண் பாடிய "மணிகே மாகே ஹிதே" பாடல் இன்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக ஜோஷ், மோஜ், டிக் டாக், ரீல்ஸ் என பல ஆப்களில் இந்த பாடலை வைத்து டப்மாஷ் செய்பவர்கள் ஏராளம்.

அந்தவகையில், இளம்பெண் ஒருவர் தன் வளைகாப்பு நாளில் இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.


Advertisement