காதல் கணவன் கை நீட்டியதால் 5 மாத கர்ப்பிணி விபரீதம்.. மண்ணெண்ணெயை ஊற்றி அதிர்ச்சி செயல்..!!pregnant lady suicide attempt in ariyalur

காதல் கணவன் கை நீட்டி அடித்ததால் மனவிரக்தியில் 5 மாத கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி வெத்தியார் வெட்டு கிராமத்தைச் சார்ந்த பெண்மணி அபிராமி. இவர் அதே கிராமத்தைச் சார்ந்த மற்றொருவரை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தற்போது அபிராமி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். 

இந்த நிலையில், தனது முதல் குழந்தை தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு அபிராமி கண்டிக்கவே, அபிராமிக்கு மாமனார், மாமியார் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை தனது கணவரிடம் தெரிவிக்க, அவரும் அபிராமியை அடிக்கவே வாழ்க்கையில் விரக்தியடைந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

pregnant lady

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அபிராமி, அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.