திருமண பெண் சாவில் திடீர் திருப்பம்! கற்பழித்து, கொடூரமாக கொலை!Pondichery girl raped and murder

புதுச்சேரி, குயவர்பாளையம் நல்ல தண்ணீர் கிணற்று வீதியில் வசிப்பவர் பூபதி மனைவி அகிலாண்டேஸ்வரி. இவரது மகள் அம்சபிரபாவுக்கு, வரும் 27ம் தேதி திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அம்சபிரபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். ஆனால் அம்சபிரபா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் தற்கொலை பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணையை துவக்கினர். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரேதே பரிசோதனை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Murder

அம்சபிரபா தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.

அம்சபிரபாவின், பின்பக்க தலை மற்றும் முகம் உள்ளிட்ட பல இடங்களில் காயம் இருந்துள்ளது. அவர், பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் அம்சபிரபாவின் பக்கத்துக்கு வீட்டு இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.