"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உள்ள முன்மாதிரி கிராமம்.. கூடுதலாக 7 பேர் தேர்வில் தேர்ச்சி.!
புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு காவல்துறையில் திருக்கனூர் செட்டிபட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர், தலைமை காவலர், ஊர்க்காவல்படை, தீயணைப்பு படை, பெண் காவலர்கள் என பல பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
காவல் துறையினருக்கான தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வந்தாலும், இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று பணியாற்றுகின்றனர். புதுச்சேரி மாநில காவல் துறை சார்பில் நடைபெற்ற தேர்வில், செட்டிபட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த தேர்வு தேர்ச்சி விபரங்கள் வெளியான நிலையில், கிராமத்தை சேர்ந்த 7 பேர் காவல் துறையினருக்கு தேர்வாகி இருக்கின்றனர். இதனால் அந்த கிராமமே காவல்துறை கிராமமாக மாறியுள்ளது. இதில், தமிழ்செல்வம் என்பவர் மாநில அளவில் 8 ஆவது நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிராமத்தில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் தினக்கூலித் தொழிலாளர்களாக இருந்து வரும் நிலையில், ஒவ்வொருவரும் கஷ்டத்தை உணர்ந்து தங்களின் வாழ்க்கையை முன்னேற்ற உழைத்து வெற்றி அடைந்துள்ளனர். மேலும், வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பிற இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கின்றனர்.