63 வயது மூதாட்டி, 25 வயது இளைஞனால் கற்பழிப்பு.. காவல்துறை பற்றாக்குறையால் துயரம்.! அரங்கேறிய பயங்கரம்.!Pondicherry Tamilnadu Border Area 63 Aged Old Woman Sexual Abuse by 25 Aged Youngster

வயல்வெளியில் வேலைபார்த்துக்கொண்டு இருந்த மூதாட்டியை கற்பழித்து, அவரின் கம்மலை பறித்து சென்ற பயங்கரம் நடந்துள்ளது. போதையில் வந்த இளைஞனால் அரங்கேறிய துயரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் எல்லைப்பகுதியாக உள்ள பாகூர், சோரியாங்குப்பம் - கிருமாம்பாக்கம், முள்ளோடை பகுதியில் 20 க்கும் மேற்பட்ட மதுபான, சாராய கடைகள் உள்ளன. இப்பகுதிக்கு வந்து மதுபானம் அருந்த தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள். 

சிலர் சொகுசாக மதுபானம் அருந்த நினைத்து மதுவை வாங்கி வயல்வெளிகள் மற்றும் ஆற்றங்கரையில் அமர்ந்து மதுபானம் குடித்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது சட்ட ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. பெண்கள், சிறுவர்கள் பள்ளிகளுக்கு சென்று வரும் நேரங்களில் கடுமையான அவதியும் அடைகின்றனர்.

மேலும், பாகூர் காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகள் குறைந்தளவே பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், கண்காணிப்பு பணிகளும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதனை உபயோகம் செய்து சமூக விரோதிகள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று அப்பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, விவசாயம் செய்ய வயல்வெளிக்கு சென்றுள்ளார். அவர் தனது பணிகளை மேற்கொண்டு இருக்கும் போது, 25 வயது மதுபோதை வாலிபர் மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்து செல்போன் கேட்டுள்ளார். மூதாட்டியும் செல்போனை கொடுத்த நிலையில், மூதாட்டி குறித்து விசாரித்த வாலிபர், திடீரென மூதாட்டியை அடித்துள்ளார்.

Pondicherry

இதனால் மயங்கி விழுந்த மூதாட்டியை புதருக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டவே, மூதாட்டியின் தங்க கம்மலையும் பறித்து சென்றுள்ளார். வயல் வெளிக்கு சென்ற மூதாட்டி, வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை தேடி வயலுக்கு சென்றுள்ளனர். 

அப்போது, மூதாட்டி அலங்கோலமான நிலையில் இருப்பதாய் கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாகூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.