கள்ளகாதலிக்காக மனைவி, மகளை எரித்த கணவன்.. நள்ளிரவில் பயங்கரம்., ஊசலாடும் உயிர்.. கள்ளக்காதல் கபளீகரங்கள்.!Pondicherry Man Killed Daughter and Attempt Wife due to Affair

10 ஆண்டுகளாக பெண்ணுடன் கொண்ட கள்ளகாதலுக்காக மனைவியை கணவன் கணவன் கொலை செய்ய முயற்சித்த நிலையில், அப்பாவி மகள் பலியாகிவிட தாய் உயிருக்கு போராடி வருகிறார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உழவர்கரை கான்வென்ட் வீதியை சார்ந்தவர் ஆரோக்கியநாதன் என்ற சங்கர் (வயது 53). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மரியலூர்தியா (வயது 52). தம்பதிகளுக்கு பிரான்கோ என்ற 28 வயது மகனும், லூர்துமேரி என்ற 16 வயது மகளும் இருக்கின்றனர். 

லூர்துமேரி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று முடித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மரியலூர்தியா, லூர்துமேரி இருவரும் உடலில் தீப்பற்றி எரிந்தவாறு அலறியுள்ளனர். அப்போது மற்றொரு அறையில் இருந்த பிரான்கோ, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 

Pondicherry

பின் காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆரோக்கியநாதனுக்கு மூலக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பத்து வருடமாக பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால், இடையூறாக உள்ள மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு 8ஆம் தேதி தூங்கிய மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது அம்பலமானது.

அப்போது அருகே இருந்த மகளின் மீது தீ பரவிய நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் சந்தேக வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் மனைவியை கொலை செய்ய முயற்சித்ததற்காக ஆரோக்கியநாதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.