தமிழகம்

திருநங்கையுடன் உல்லாசம் அனுபவித்த போலீஸ்: பொதுமக்களிடம் வசமாக சிக்கிய வைரல் வீடியோ!.

Summary:

police with transgender viral video

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கையுடன் காவலர் ஒருவர் இருந்ததாகக் கூறி, பொலிஸ் வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று இரவு காவலர் ஒருவர், திருநங்கையுடன் பாலியல் உறவில் ஈடுபட சென்றதாக கூறி அந்த வழியே சென்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பிடித்த்து அவரது வண்டியை தாக்கி, போலீஸ் சீருடை அணிந்துகொண்டு இவ்வாறு செய்யலாமா என வெளுத்துவங்கியுள்ளனர். 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த பள்ளிகரணை காவல்துறை அதிகாரிகள், அந்த காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பள்ளிகரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்காமல் அவருடைய வாகனத்தை மட்டும் காவல் நிலையத்தில் வைத்து விட்டு காவலரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பொதுமக்களிடம் வசமாக சிக்கிய காவலரை அவர்கள் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement