தமிழகம்

காவலருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து மணல் கொள்ளையர்கள் செய்த காரியம்.! போதை தெளிந்த ஏட்டய்யாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

காவலருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து மணல் கொள்ளையர்கள் செய்த காரியம்.! போதை தெளிந்த ஏட்டய்யாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இவர் இதற்கு முன்பு பணியாற்றிய ஆதனக்கோட்டை காவல்நிலைய எல்லை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் இன்பசுரேஷ் என்பவர் தொலைபேசியில், அன்பழகனை தொடர்பு கொண்டு ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் தனது மணல் வண்டியை பிடித்து வைத்துள்ளனர். நீங்கள் வந்து மீட்டுத்தர வேண்டும் என கூறி அழைத்துள்ளார்.

இதனையடுத்து தனது இருச்சக்கரவாகனத்தில் அன்பழகன் அங்கு சென்று கொண்டிருந்தார். அவர் பெருங்களூர் அருகே சென்றபோது அன்பழகனை மணல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த இன்பசுரேஷ், முகேஷ், கண்ணன் உள்ளிட்ட நான்குபேர் காவலர் அன்பழகனை சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து அதேபகுதியில் மது அருந்தி உள்ளனர்.

அப்போது காவலர் அன்பழகன் அதிக அளவில் மது குடித்ததால், போதையில் அங்கேயே மயங்கியுள்ளார். இதனையடுத்து காவலர் அன்பழகன் வைத்திருந்த வாக்கி டாக்கியை இன்பசுரேஷ் உள்ளிட்ட 4 பேரும் திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனையடுத்து போதை தெளிந்தவுடன் அன்பழகன் விழித்து பார்த்தபோது, அவரிடம் இருந்த வாக்கி டாக்கி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து காவலர் அன்பழகனின் வாக்கி டாக்கியைத் திருடிய குற்றச்சாட்டின் தொடர்பில், நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த இன்பசுரேஷ், முகேஷ், கண்ணன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மணல் கடத்தல் வாகனத்தை விடுவிக்கக் கோரி, வாக்கி டாக்கியைத் திருடி மணலில் புதைத்து வைத்தது தெரியவந்தது.


Advertisement