13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
கார் டிரைவரை தவறுதலாக பேசிய போலீசார்!! கார் ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு!! வெளியான அதிர்ச்சி வீடியோ!!
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே கடந்த மாதம் 25-ஆம் தேதி தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு, அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது.
தகவலறிந்த ரயில்வே போலீசார் வாலிபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த வாலிபர், காஞ்சீபுரம் அருகே உள்ள கம்மவர்பாளையம் பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் கால் டாக்சி டிரைவர் ராஜேஷ் விபத்தில் மரணமடைந்தார் என்று வழக்கு பதிவு செய்து அவரது உடலை ரயில்வே போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில் நேற்று சமூக வலைதளங்களில் ராஜேஷ், இறப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவியது. அதில் அவரது சாவுக்கு போக்குவரத்து போலீசார்தான் காரணம் என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோவில், ராஜேஷ் பேசுகையில் "தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை ஏற்றிக் கொண்டு ஆண் ஊழியருக்காக, சாலையோரம் காரை நிறுத்தி அவருக்காக காத்திருந்தேன்.அங்கு வந்த 2 போக்குவரத்து போலீசார், காரை அங்கு நிறுத்தக்கூடாது என, தகாத வார்த்தைகளால் திட்டினர். நான் எவ்வளவோ கூறியும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!https://t.co/65OofwQ4Kh#calltaxidriver pic.twitter.com/SHH0agGNMD
— namdinamathi (@namdinamathi) 31 January 2019
என் சாவுக்கு, சென்னை போலீஸ் தான் காரணம், இது போன்ற காவல்துறையினர் இருக்கும் வரை, டிரைவர் செத்துக் கொண்டு தான் இருப்பார்கள். எனது சாவே இறுதியாக இருக்கட்டும் என அந்த வீடியோவில், ராஜேஷ் பேசியுள்ளார்.
வீடியோவில் ராஜேஷ் கூறியதுபோல அவர் நின்ற சிக்னல் மற்றும் திருவொற்றியூர் பகுதியில் அப்போது எந்த போக்குவரத்து போலீஸ்காரர்கள் பணியில் இருந்தார்கள் என்று அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.