தமிழகம்

மதுபோதையில் வீட்டிற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர்.! மகள் கேட்ட ஒரே கேள்வி.. திடீரென கத்தியை எடுத்து குத்திக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர்.!

Summary:

மதுபோதையில் வீட்டிற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர்.! மகள் கேட்ட ஒரே கேள்வி.. திடீரென கத்தியை எடுத்து குத்திக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர்.!

திருமுல்லைவாயல் பகுதியில் காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் சாய் குமார். இவர் ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

சாய்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சாய்குமாரை, அவரது மூத்த மகள் ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறீர்கள் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சாய்குமார், எனக்கே நீ அறிவுரை சொல்கிறாயா... என கேட்டு, வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் தனது வயிற்று பகுதியில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement