ரஜினியின் சர்ச்சை பேச்சால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மீண்டும் பரபரப்பானது போயஸ் கார்டன்!

ரஜினியின் சர்ச்சை பேச்சால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மீண்டும் பரபரப்பானது போயஸ் கார்டன்!



police protection in boyas garden

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், '1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் வெளியிடவில்லை. ஆனால், ‘சோ’ அதை வெளியிட்டார் என பேசினார்.

ரஜினி இவ்வாறு பேசியதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஆனாலும் தனது கருத்து குறித்து நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் ஆணித்தனமாக தெரிவித்துள்ளார்.

rajini

இந்தநிலையில் ரஜினிகாந்த் வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் போயஸ் கார்டன் பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் வசித்தபோது, போயஸ் கார்டனில் பல அடுக்குகளாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருப்பார்கள். இந்தநிலையில் தற்போது பெரியார் குறித்த சர்ச்சை பேச்சால் மீண்டும் போயஸ் கார்டனில் பல அடுக்குகளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.