குடும்பத்துடன் வந்த தம்பதியை மடக்கி, குழந்தைகளை கதறவிட்ட போலீஸ் அதிகாரி! வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் பொதுமக்கள்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கணவன் மணைவிக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் நடந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் இருவரும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை மடக்கி விசாரித்துள்ளனர்.
சோதனையின்போது அணைத்து ஆவணங்களும் இருப்பதாக அவர்கள் கூறி உள்ளனர். ஆனால் இருசக்கர வாகனத்தில் இருவர் தான் வரவேண்டும் என்ற நிலையில், கூடுதலாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தது ஏன் என்று போலீசார் கேள்வி எழுப்பினர். இதனால் அந்த தம்பதிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான காவல்துறை அதிகாரி அசல் ஆர்.சி. புத்தகத்தைக் காட்டுமாறு கேட்டுள்ளார். அவரது செயலால் குழந்தைகள் மற்றும் அவரது மனைவி அழுதுள்ளனர். ஆனாலும் அந்த காவலர் விடாமல் அவர்களை தொல்லைப்படுத்தும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த காவலர்களே இதுபோன்ற அதிகாரியின் செயலால் தான் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று சொல்லும் அளவிற்கு அந்த வீடியோ உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் கோவத்தில் திட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.