தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கணவனை பிரிந்த பெண்ணை காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் கைது.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் அருகே உள்ள அணிக்காடு பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து சித்தி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே சசிகலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஊட்டி போக்குவரத்து போலீஸ்காரர் கண்ணன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதனிடையே சசிகலாவை ஏமாற்றி கடந்த 23ஆம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் போலீஸ் காரருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை சசிகலா தடுக்க முயற்சி செய்தும், திருமணம் நிற்கவில்லை. இதனால் மனமுடைந்த சசிகலா கடந்த 21 ஆம் தேதி விஷம் குடித்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சசிகலாவை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சசிகலாவின் உறவினர்கள் அளித்த புகாரி அடிப்படையில் மஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.