வானத்தை நோக்கி சுடவில்லை... தடியடி நடத்தவில்லை... கலவர கும்பலை புத்திசாலித்தனமான விரட்டிய போலீஸ்...

வானத்தை நோக்கி சுடவில்லை... தடியடி நடத்தவில்லை... கலவர கும்பலை புத்திசாலித்தனமான விரட்டிய போலீஸ்...



police-man-brilliant-ideas

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில் கடந்த 2 ஆம் தேதி கபடி போட்டி நடைபெற்றது. அதில் விளங்குளத்தூர் கீழகன்னிசேரி கிராம இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அதன் எதிரொலியாக இரு கிராமங்களை சேர்ந்த மக்களும் அரிவாள், கட்டைகளுடன் ஒன்று சேர்ந்து கலவரத்தில் ஈடுபட திரண்டுள்ளனர். அந்த கலவரத்தை தடுக்க விளங்குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால் அங்கு குறைந்த அளவு போலீசார் மட்டுமே வந்த காரணத்தால் கலவரத்தை தடுக்க புத்திசாலித்தனமான முதுகுளத்தூர் உதவி ஆய்வாளர் செல்வம் மேற்கொண்டுள்ளார்.

police man

அதாவது துப்பாக்கியை கையில் தூக்கி பிடித்தப்படி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். எஸ்.ஐ. செல்வத்தின் கையில் துப்பாக்கியை பார்த்ததும் இரு கிராம மக்களும் பின் வாங்க ஆரம்பித்துள்ளனர். போலீசாரின் இந்த செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

பின்னர் முதுகுளத்தூர் போலீசார் இரண்டு கிராமங்களையும் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அந்த கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.