இடத்தகராறில் உடைந்த மண்டை.. பிரிக்கவேண்டியது நிலத்தைத்தானே தவிர்த்து, மண்டையை அல்ல..!

இடத்தகராறில் உடைந்த மண்டை.. பிரிக்கவேண்டியது நிலத்தைத்தானே தவிர்த்து, மண்டையை அல்ல..!


police-investigated-kanyakumari-land-problem

இடப்பிரச்சினை காரணமாக இரு குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவரது மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகாமையில் இரணியல் தின்னவளைவு பகுதியில் வசித்து வருபவர் மாலதி. இவரது கணவர் சேகர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு சொந்தமான அரை சென்ட் நிலத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த மாலதி, பக்கத்து வீட்டுக்காரரான மனோஜ் என்பவரிடம் தனது உறவினர்களை அழைத்து சென்று கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

kanyakumari

இதில் மாலதி தரப்பில் ஒருவரது மண்டை உடைக்கப்பட்ட நிலையில், மூதாட்டி உட்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். பின் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மாலதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரின் பேரில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.