செய்யாத தவறுக்கு தண்டனை கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா.? காவல்துறை ஆய்வாளர் நெற்றியடி கேள்வி.! வைரல் வீடியோ.!

செய்யாத தவறுக்கு தண்டனை கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா.? காவல்துறை ஆய்வாளர் நெற்றியடி கேள்வி.! வைரல் வீடியோ.!


police-inspector-awareness-video

புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்கும் காரணத்தாலேயே 50% இறப்பை சந்திக்கிறார்கள், அதிகப்படியான புற்றுநோய், புகை பிடித்ததன் காரணமாகவே ஏற்படுகிறது, புகைப்பிடிப்பதனால் மாரடைப்பும் ஏற்படுகிறது, அதைப்போல் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களும் புகைப்பிடிப்பதனால் ஏற்படுகிறது.

இந்தநிலையில், தென்காசி காவல்துறை ஆய்வாளர்  திரு.ஆடிவேல் அவர்கள் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நீங்கள் செய்யாத தவறுக்கு தண்டனை கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா.? என பலரிடம் கேட்கின்றார். அதற்கு பலரும் எப்படி செய்யாத தவறுக்கு தண்டனை ஏற்றுக்கொள்ளமுடியும். சிலர் செய்த தவறுக்கு  கொடுக்கும் தண்டனையையே ஏற்றுக்கொள்வதில்லை என கூறுகின்றனர்.

அதற்க்கு பதில் கூறும் காவல் ஆய்வாளர்  திரு.ஆடிவேல்,  புகைப்பிடிக்கும் காரணத்தால் 20% பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதே புற்றுநோயால் 36% பேர் புகை பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் புகை பிடிப்பவர்கள் தான். எனவே புகைப்பழக்கத்தால் புகைபிடிப்பவர்கள் உடல்நிலை கெட்டுப்போவது மட்டுமல்லாமல், புகை பிடிப்பவர்களை சுற்றியுள்ள நபர்களின் உடல்நிலையும் கெட்டு போகின்றது. எனவே பொதுநலன் கருதி சொல்கிறேன் புகைபிடித்தல் அனைவரின் உடல்நலத்திற்குமே கேடு என கூறியுள்ளார். இந்த வீடியோவை பலருக்கும் பகிர்ந்து புற்றுநோயை தவிர்ப்போம்.