தமிழகம்

திருமண வீட்டில் மூக்கு பிடிக்க சாப்பிட்டுவிட்டு மொய் பணத்தை அபேஸ் செய்த இளைஞர்..! விசாரணையில் வெளிவந்த உண்மை.!

Summary:

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

முந்தய காலத்தில் தனது சொந்த வீடுகளில் நடைபெறும் திருமணம், காதணி, பூப்பு நீராட்டு விழா என நடந்த விழாக்களில் சாதாரணமாக துவங்கிய மொய் வழங்கும் விழா நாளடைவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை வட்டியில்லா கடனாக மாறி முக்கிய வருமான நிகழ்வாக திருமண மண்டபங்களிலும், விழா அரங்களிலும் மொய் விருந்து விழா நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இந்த மொய் விருந்து விழா குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் பேமஸ் என கூறலாம்.

ஆனாலும் பல நகரங்களில் முந்தய காலத்தை போலவே வீடுகளில் நடைபெறும் திருமணம், காதணி, பூப்பு நீராட்டு உள்ளிட்ட விழாக்களில் மொய் வாங்கி வருகின்றனர். இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த நவீன் என்பவருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கவரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது மேடை அருகில் மணமகன் நவீனின் உறவினர் மற்றும் நண்பர்கள் அவரிடம் அன்பளிப்பு மற்றும் மொய் பணத்தை கொடுத்தனர். அப்போது, மேடையில் இருந்த மர்ம நபர் மணமகன் நவீன் வைத்திருந்த பையில் ரூ.42 ஆயிரம் மொய் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார், இதனையடுத்து  போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மண்டபத்தில் எடுத்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். 

போலீசார் வீடியோவை ஆய்வு செய்ததில் ஒருவர் மொய் பணத்தை திருடிச் செல்வதை உறுதி செய்தனர். மேலும் அந்த வீடியோவில் பதிவாகி இருப்பது  வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேகொண்டனர். விசாரணையில் வெங்கடேசன் திருமணத்தில் சாப்பிட்டு விட்டு, மணமகன் நவீன் அருகே யாரும் இல்லாத நேரத்தில் மொய் பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது.


Advertisement