குட்கா கடத்தல்: ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பல ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

குட்கா கடத்தல்: ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பல ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்..!


Police have arrested two people involved in the Gudka kidnapping

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வெவ்வேறு இடங்களில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருணாநிதி நகரில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்தபோது, அவர் தமிழக அராசல் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 

இதனை அடுத்து, ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான 30 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் முருகன் என்பவரை கைது செய்தனர். இதேபோல், கோவில்பட்டி  மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான காவல்துறையினர் இனாம் மணியாச்சி மேம்பாலம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். 

இதனையடுத்து ஆட்டோவில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 1,410 புகையிலை பாக்கெட்டுகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  இதுதொடர்பாக கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துபாண்டியை கைது செய்துள்ளனர்.