இளம்பெண்ணை கிண்டல் செய்த சிறுவன்..!! தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து..!! கஞ்சா போதையில் வெறிச்செயல்..!!

இளம்பெண்ணை கிண்டல் செய்த சிறுவன்..!! தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து..!! கஞ்சா போதையில் வெறிச்செயல்..!!


police have arrested the boy who stabbed his husband to death by stabbing the boy who was teasing his wife.

மனைவியை கிண்டல் செய்த சிறுவனை தட்டிக்கேட்ட கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள மணலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (33). செங்கல் சூளைலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா(30). இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை சித்ரா அதேபகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுவன் (17) கஞ்சா போதயில் இருந்ததாகவும், அவன் சித்ராவை கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சித்ரா, தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற விஜயகுமார், எதற்காக எனது மனைவியை கிண்டல் செய்தாய் என்று சம்பந்தப்பட்ட சிறுவனிடம் கேட்டதுடன், அவனை கழுத்தில் கத்தியால் கீறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, விஜயகுமாரை கழுத்தில் குத்தினான்.

எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தோர் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கிண்டல் செய்த சிறுவனை தட்டிக்கேட்ட கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.