தமிழகம்

கூரியரில் கடத்தல்; வாட்ஸ்-அப் குழுக்களில் விற்பனை: பலே கில்லாடி கஞ்சா கடத்தல் ஆசாமிகள் கைது..!

Summary:

கூரியரில் கடத்தல்; வாட்ஸ்-அப் குழுக்களில் விற்பனை: பலே கில்லாடி கஞ்சா கடத்தல் ஆசாமிகள் கைது..!

கூரியர் மூலமாக கஞ்சாவை கடத்தி வாட்ஸ்-அப் இன்ஸ்டாகிராமில் குழுக்கள் அமைத்து விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தம்மத்துகோணம் பகுதியில், காவல்துறை தனிப்படையினர் ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக  பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் எடை போடும் எந்திரம், செல்போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் பின்னர் கைதானவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஆனந்தன் நகரை சேர்ந்த ஜெர்ரி (வயது 24) ,எறும்பு காடு பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 28) மற்றும் மேலராமன்புதூரை சேர்ந்த பிரிஜின் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கூரியர் பார்சல் மூலமாக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது

இதற்கிடையில் கூரியர் பார்சல் அலுவலகத்தில் நடந்த விசாரணையின் போது இந்த கஞ்சா கடத்தலில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த வீரமணி (வயது 20) ராமன்புதூர் நாஞ்சில் நகரை சேர்ந்த தீபு (வயது 19) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் மேலராமன்புதூர் பகுதியில் வைத்து வீரமணி மற்றும் திபூவை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.


Advertisement