BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வேனில் கடத்திய 1200 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் தப்பி ஓட்டம், டிரைவர் கைது..!
1200 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக சரக்குந்தில் கடத்திச் செல்லும்போது காவல்துறையினர் பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பொம்மண்டபள்ளி கூட்ரோடு பகுதியில் நேற்று மந்திரகிரி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்குந்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டபோது சரக்குந்தில் இருந்த மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சரக்குந்தில் இருந்த 6.60 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி செல்வதை கண்டு பிடித்த காவல்துறையினர், அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் சரக்குந்து ஓட்டுனர் மணிகண்டனை காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அவர் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு குட்கா பொருள்களை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குட்கா கடத்தலில் தொடர்புடைய தினேஷ், நவீன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.