தமிழகம்

சைக்கிளில் வந்த பள்ளிச்சிறுவனை பிடித்த போலீஸ்! போலீசாரின் செயலால் முகம் சுழித்த பொதுமக்கள்! வைரல் வீடியோ!

Summary:

police caught cycle


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தலைக்கவசம் அணியாமல் கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியபடி ஒருவர் சென்றார். ஆனால் அவரை பிடிக்காமல், சைக்கிளில் சென்ற சிறுவனை மடக்கி பிடித்து அந்த சைக்கிளை உதவி ஆய்வாளர் பறிமுதல் செய்த சம்பவம், பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.


கடந்த ஒரு மாதங்களாக தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்தவத்தில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். சென்னையில் வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணியவேண்டும் என்ற சட்டத்தினை கடைபிடித்தனர். 


இந்தநிலையில் தர்மபுரியில் சாலை வழியாக சைக்கிளில் சென்று சென்று கொண்டிருந்த சிறுவனை சாலையின் குறுக்கே பாய்ந்து பிடித்து மடக்கியுள்ளார் உதவி ஆய்வாளர். சைக்களை மடக்கி பிடித்தது மட்டுமல்லாமல், பைக்குகளின் சாவியைப் பிடுங்குவதைப் போல், சிறுவன் வைத்திருந்த இலவச சைக்கிளின் பூட்டை பூட்டி ஓரமாக வைத்துள்ளார். தன்னை ஏன் போலீஸ் தடுத்து நிறுத்தினார் என்பது தெரியாமல், திகைத்து நின்றுள்ளான் அந்த சிறுவன்.

இந்தநிலையில் குழப்பத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு சைக்கிளையும், பள்ளி மாணவரையும் விடுவித்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement