மழைக்கு அடைக்கலம் ஒதுங்கிய சிறுமி... திருமண மண்டபத்தில் அலறல் சத்தம்.. கிழட்டு காமுகனால் நடந்த பயங்கரம்..!police arrested old man for harassment

17 வயது சிறுமிக்கு 73 வயது கிழட்டு காமுகன் பாலியல் தொல்லையளித்த நிலையில், காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பயின்றுவிட்டு வீட்டு வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி பகத்சிங் நகர் வழியே உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென மழை பெய்துள்ளது. 

இதனால் சிறுமி அருகிலிருந்த திருமண மண்டபம் முன்பு மழைக்காக ஒதுங்கி நின்ற சமயத்தில், அங்கு பணியில் இருந்த காவலாளியான ஜோதிபுரத்தை சார்ந்த நடராஜன் என்ற 73 வயது முதியவன் அன்பாக பேசுவது போல் நடித்து இருக்கிறான். இதனை தொடர்ந்து சிறுமியை மண்டபத்திற்குள் வருமாறு அழைத்த கிழட்டு காமுகன் சிறுமி மண்டபத்திற்குள் வந்ததும், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

harassment

இதனால் பதறிப்போன சிறுமி சத்தமிடவே அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு துடித்துபோன தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் காவலாளி நடராஜனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது