சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்பூ திடீர் கைது.!

திருமாவளவனை கண்டித்து பா.ஜனதா சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை போலீசார் கைது செய்தனர்.


police-arrested-kushboo

மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்கள் குறித்து இழிவாய் சொல்லப்பட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில், பெண்கள் குறித்து தவறாக பேசிய திருமா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார் குஷ்பூ.

kushboo

இதனையடுத்து காரில் சென்ற குஷ்பூவை போலீஸார் முட்டுக்காடு அருகே நிறுத்தி கைது செய்துள்ளனர். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் மன்னிப்பு கேட்க கோரி குஷ்பூ போராட்டம் நடத்த இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.