துணை நடிகையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்கள்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

துணை நடிகையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்கள்.! தட்டி தூக்கிய போலீஸ்.!


police arrest two accused

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் துணை நடிகையான  38 வயது பெண் 8 ஆம் தேதி அன்று அவரது வீட்டில் இருந்த போது,  இரவு 11 மணியளவில்   அங்கு வந்த ஒரு நபர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றொரு நபருடன் சேர்ந்து அப்பெண்ணை மிரட்டி தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு இருவரும் தப்பியுள்ளனர்.

இதனையடுத்து அப்பெண் நடந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மதுரவாயலை சேர்ந்த செல்வக்குமார் என்பவரையும், இராமபுரம்  பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  தங்க நகைகள், 3 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.