தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பாரத ரத்னா விருது வேண்டாம்; ராமதாஸ் கூறும் காரணம் இதுதான்..!
சென்னையில் உள்ள எழும்பூரில், இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள், கட்சியினரிடையே உரையாற்றினார்.
எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியினரை தயார்படுத்தும் பொருட்டு பொதுக்குழு கோட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு உழைத்து வரும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாரத ரத்னா விருது வழங்கியிருக்கப்பட வேண்டும் என பேசி இருந்தார்.
இதனையடுத்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "பாரத ரத்னா உட்பட எந்த விருது கொடுத்தாலும் நான் வாங்க மறுபெண். ஏனெனில் அதைவிட சிறந்த விருதாக, நான் உங்களின் மனதில் வாழ்கிறேன். உங்களின் மனதில் வாழ எனக்கு நீங்கள் கொடுத்த இடமே எனக்கு விருது" என கூறினார்.