புதுக்கோட்டையில் மீனுக்கு வலைவிரித்த இளைஞர்.! ஆனால் சிக்கியது என்னன்னு பார்த்தீர்களா!! பேரதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்.!

புதுக்கோட்டையில் மீனுக்கு வலைவிரித்த இளைஞர்.! ஆனால் சிக்கியது என்னன்னு பார்த்தீர்களா!! பேரதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்.!



phython-in-fishing-net

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக ஏரி-குளங்கள் நிரம்பின. புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ச்சியாக மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள அணைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன. இந்தநிலையில், விராலிமலை தாலுகா, நீர்பழனியில் உள்ள பெரியகுளம் சமீபத்தில் பெய்த பருவ மழையால் நிரம்பி அதன் உபரி நீர் கலிங்கி வழியாக வெளியேறி வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பலரும் தூண்டில் மற்றும் வலைகளை கொண்டு குளத்தின் ஓரப்பகுதியிலும் கலிங்கியில் இருந்து வெளியேறும் தண்ணீரிலும் மீன்பிடித்து வருகின்றனர். அந்தவகையில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் குளத்தில் மீன்பிடி வலை ஒன்றை விரித்து கட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை அவர் மீனுக்கு விரித்திருந்த வலையை வெளியே இழுத்த போது வலை மிகவும் கனமாக இருந்தது.

phython

இதனால் வலையில் பெரிய மீன்கள் அதிகமாக சிக்கியுள்ளன என நினைத்து அந்த நபர் மிகவும் மகிழ்ச்சியுடன் வலையை இழுத்துள்ளார். ஆனால் அந்த வலையில் சில மீன்களுடன் பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்றும் சிக்கியிருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் வலையை வெளியே போட்டுவிட்டு அலறல் சத்தம் போட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் வலையில் சிக்கிய மலைப்பாம்பை மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.