கொரோனா கால ஏழைகளின் கடவுள்.! தொடர்ந்து 10 நாட்களாக பசியில் வாடியோர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் மாற்றுத்திறனாளி.!

கொரோனா கால ஏழைகளின் கடவுள்.! தொடர்ந்து 10 நாட்களாக பசியில் வாடியோர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் மாற்றுத்திறனாளி.!



physically-challenged-person-help-to-poor-people

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தீத்தானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவர். கடந்த 10 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவரது வீட்டில் உணவு ஏற்பாடு செய்து, அதனை பார்சல் செய்து நேரில் சென்று கொடுத்து, ஏழைகளின் பசியை போக்கி வருகிறார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக புதுக்கோட்டை நகர பகுதியில் பசியில் வாடும் ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளி ஆதரவற்றோர் பலருக்கு மதிய உணவை தொடர்ந்து வழங்கி வருகிறார் ரெங்கராஜ். ரெங்கராஜ் என்பவரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. பசியில் வாடும் நபர்களுக்கு உணவு வழங்குவது மிகவும் மன நிறைவடைகிறது என்கிறார் ரெங்கராஜ்.

physically challenged personஇவர் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு தயார் செய்து, புதுக்கோட்டை நகரில் பசியோடும், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சாலையோரங்களில் வாடிய முகத்துடன் இருந்த மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் என பசியில் வாடிய பலருக்கும் உணவு வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பிறந்த மாவட்டத்தில் பலர் உண்ண உணவு இல்லாமல் தவித்து வருவதை பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தேன். 

இதன்காரணமாக என்னால் இயன்ற அளவு இந்த ஊரடங்கு காலத்தில் இதுபோன்று உணவு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு என்னால் முடிந்த வரை உதவி செய்வேன். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் நகர்புறங்களில் ஆதரவற்றோர் பலர் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கூட தவித்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் தனது கஷ்டத்தை கண்டு கொள்ளாமல் மாற்றுத்திறனாளியான ரெங்கராஜ் செய்யும் உதவி தமிழக மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.