கொரோனா சமயத்தில் அதிகரித்த பெட்ரோல் விலை! ஆறுதல் படுத்திய டீசல் விலை!petrol price increased


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மாற்றங்களை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதத்தில் எந்த மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தது. ஆனால் ஜூன் மாதம் முதல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

petrol pricee

இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசு அதிகரித்து ரூ.84.26க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 ஆக விற்பனை செய்யப்படுகிறது.