
Periyar statue damaged
உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்து உள்ளது. ரஜினிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நீடித்து வருகிறதது.
இந்த நிலையில் உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் இருந்த பெரியார் சிலை இன்று உடைக்கப்பட்டுள்ளது.
பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Advertisement
Advertisement