தமிழகம்

எல்லோரும் ஆதரவு தருகிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறிங்க? கண்ணீருடன் அழுகிறார் பேரறிவாளனின் தாய்!.

Summary:

எல்லோரும் ஆதரவு தருகிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறிங்க? கண்ணீருடன் அழுகிறார் பேரறிவாளனின் தாய்!.

பேரறிவாளனின் வாழ்க்கையே அழிந்து விட்டதாகக் கூறி அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் வடித்துள்ளார். எனது மகனின் வாழ்கை முழுவதும் சிறையிலே போய்விடுமோ என மன வேதனையுடன் கண்ணீர் வடிக்கிறார் அற்புதம்மாள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், உட்பட 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு 7 பேரை விடுவிக்க தீர்மானம் இயக்கி ஆளுநருக்கு அதை அனுப்பியது. ஆனால் ஆளுநர் இதுவரை அந்த வழக்கு சம்பத்தப்பட்ட முடிவை இன்னும் வெளியிடவில்லை.

 7 தமிழர்களில் ஒருவரான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், பேரறிவாளனின் வாழ்க்கையே அழிந்து விட்டது, 7 பேரின் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மட்டும் எதிர்ப்பது ஏன் என மன குமுறலுடன் கேட்டுள்ளார்.


 


Advertisement